கோவையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளியான திலக் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்!

கோவை: கோவையில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திலக் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


கோவை: கோவையில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திலக் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடந்த மாதம் 30-ம் தேதி கோவை வைசியாள் வீதியில் வீட்டியல் தனியாக இருந்த மூதாட்டி தனலட்சுமி கொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த 80 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தனலட்சுயின் வீட்டுக்கு பக்கத்து தெருவில் வசித்து வந்த லதா மற்றும் மாலா என இரு சகோதரிகள் பீளமேடு பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் மனோஜ், செல்வம், ஆட்டோ ஓட்டுநர் சத்தியசீலன் ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதனிடையே, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, மூதாட்டியை திட்டம் தீட்டி கொலை செய்ய மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான லதாவின் சகோதரரான திலக் என்பவரை போலீசார் சென்னை மற்றும் திருப்பதியில் முகாமிட்டு தேடி வந்தனர்.

இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திலக் இன்று சரணடைந்தார். இதனையடுத்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்றுள்ள போலீசார், திலக்கை கோவை அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திலக்கை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என போலீசார் கருதுகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...