இராக்கொக்கை இலகுவாக இறையாக்கிய பூமன் ஆந்தை..!

கோவை: விவசாயின் நண்பன் என மண்புழுவை தான் சொல்லுவார்கள். ஆனால், ஆந்தையும் அதில் இணைத்து கொள்ளலாம். பகல் பொழுதில் காண்பது அரிதாக காணப்படும்.


கோவை: விவசாயின் நண்பன் என மண்புழுவை தான் சொல்லுவார்கள். ஆனால், ஆந்தையும் அதில் இணைத்து கொள்ளலாம். பகல் பொழுதில் காண்பது அரிதாக காணப்படும்.

பொதுவாகவே ஆந்தை என்றால் நமது நினைவிற்கு முதலாக வருபவை, நமது வீட்டிற்கு அருகில் இரவு நேரத்தில் மின் கம்பிகளின் மீதோ அல்ல வேறு எதாவது சிறிது உயரமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு, கண்களை உருட்டியபடி அலறிக் கொண்டிருக்கிறவை புள்ளி ஆந்தை.

நம்மூரில் உருவத்தில் சிறிதும் பெரிதுமானவையாகவும், சில நிற வேற்றுமைகளுடனும், பலவகை ஆந்தைகள் இருக்கிறது. அவற்றில் ஒன்றான பூமன் ஆந்தை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் கானுயிர் புகைப்படக்கலைஞர் திவ்யபாரதி.

இவ்வகை ஆந்தைகள் சமவெளி முதல் சற்று உயரமான மலைப்பகுதிகள் வரை இயல்பாக காணக்கூடியவை. காடுகளுக்குள், இவற்றை குறிப்பாக நீர்நிலைக்கருகில் காணமுடியும்.

மனிதர்களைக் கண்டால் அமர்ந்திருக்கும் இடத்தைவிட்டு அவ்வளவு எளிதாக பறந்துவிடாத பயமற்ற பறவை ஆகும்.

இங்கே, இப்ப ஒரு சுவாரசியமான நிகழ்வைச் சொல்லப் போகிறேன், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன். பந்திப்பூர் காடுகளில் காலை முதல் மாலைவரை, வனத்துறை வாகனத்தில் புலிகளைத் தேடி கொண்டிருந்தோம்.

ஒளி மங்கிக் கொண்டிருக்கிற மாலை நேரம். விலங்குகளை தேடி ஒரு நீர் நிலையை நோக்கிச் செல்கிறோம்.

திடீரென ஒரு சலனம், தரையிலிருந்து பறந்து ஒரு மரக்கிளையை நோக்கி ஒரு பறவை. இல்லையில்லை அங்கே, இரு பறவைகள் உயரக் கிளம்பி மரத்தில் அமர்ந்தது. வாகனத்தை நிறுத்தி எச்சரிக்கையாக கவனத்துடன் கவனிக்கத் துவங்கினோம்.



உற்றுப் பார்த்தால், பறந்தது ஒரு பறவைதான். மற்றொன்று தலையில்லாத உயிரற்ற உடலுடன் அந்த, பூமன் ஆந்தையின் கால்களில் சிக்கியிருந்தது.

வேகமாக சில புகைப்படங்களை எடுத்து முடித்தோம். சிறிது நேரம் அமர்ந்திருந்த பறவை சட்டெனப் பறந்து, இன்னும் சற்று தொலைவிலிருந்த மற்றொரு சற்று அடர்ந்த மரத்திற்கு இறந்த பறவையை தூக்கிச் சென்றது.

அங்கு ஏதோ அசைவு அதிகமானது போல தெரிந்தது. மற்றொரு பறவையுடன் சண்டையிட்டது போல தென்பட்டது.

சாதாரணமாக கண்களுக்கு குறைவான ஒளியில், என்ன நடக்கிறது என எங்களால் சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. கேமராவின் வழியாக பார்க்கும்போது. மற்றொரு ஆச்சரியம் அங்கே காத்திருந்தது.

அங்கு மற்றுமொரு பூமன் ஆந்தை. அது இதன் இணையாக இருக்கலாம். வேட்டையாடிச் சென்றது ஒரு பெண். உருவத்தில் சற்று காத்திருந்ததைவிட பெரிதாக இருந்ததை வைத்துச் சொல்கிறேன். இதன் குஞ்சாகவும் அது இருக்கலாம்.



மற்றொரு ஆச்சரியம் அதன் காலில் இருந்த இரைப்பறவை. அது ஒரு இளம் பிராயத்து "வாக்கா" (Night heron-இராக்கொக்கு) ஆகும்.

பூமன் ஆந்தைகள் இதுவரை யாரும் இராக்கொக்கை இரையாக அடித்ததை பார்த்ததுமில்லை. படமும் எடுத்ததில்லை என்றுகூட சொன்னார்கள்.

இந்த வகை ஆந்தைகள் பொதுவாக மீன்களையும், சிறு பறவைகளையுமே முக்கிய உணவாக கொண்டிருக்கும்.

காடு எத்தனையோ ஆச்சரியங்களை தமக்குள் கொண்டிருக்கிறது. அது நமக்கு நாளும் எதாவது கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...