கோவை: கோவை பீளமேடு அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததின் காரணமாக வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு முருகன் நகரை சேர்ந்தவர் குணசேகரன்(45). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி யசோதா(41).கோவை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், குணசேகரனுக்கு பணப்பிரச்சனை இருந்ததன் காரணமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் பெற்றதாகவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று விரக்தியில் இருந்த குணசேகரன் திருச்சி சாலையில் பகுதியில் ஒரு தனியார் கம்பெனி அருகில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார்.
இதனை கண்ட அங்கிருந்த பொது மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குணசேகரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.