தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து, பொள்ளாச்சியில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி: கடலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி: கடலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலைக்கு, மூன்று காவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதை தொடர்ந்து, அவர்கள் மூவரையும் பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது, காவலர்களை பணியிடை மாற்றம் செய்ததை கண்டித்து, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது என்பது அவர்களுடைய உரிமை, அதை எதிர்க்கும் வகையில் கடலூர் மாவட்ட காவல்துறை செயல்பட்டுள்ளது என குற்றம் சாட்டினர். 

காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் உள்ள மத வழிபாட்டு அடையாளங்களை எடுக்க வேண்டும். அதேபோல் ஆயுத பூஜை போன்ற வழிபாடுகளை ரத்து செய்ய வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள், மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும், இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும், என்று தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...