இருகூர் சிறப்புநிலைப் பேரூராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை ஆயில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த திட்டம்

கோவை: கோவை மாவட்டம் இருகூர் சிறப்புநிலைப் பேரூராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து நவீன தொழில்நுட்பம் மூலம் ஆயில் பெறப்படுகின்றன. இதனை அருகில் உள்ள தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

கோவை: கோவை மாவட்டம் இருகூர் சிறப்புநிலைப் பேரூராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து நவீன தொழில்நுட்பம் மூலம் ஆயில் பெறப்படுகின்றன. இதனை அருகில் உள்ள தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் இராசாமனி தெரிவித்ததாவது: 

இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரிக்கப்படுகிறது. இப்பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. அந்த வார்டுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் வீடு வீடாக சேகரிக்கப்பட்டு வருகிறது. 

அவற்றை, மறுசுழற்சி செய்து உபயோகமான பொருட்களாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை 2.75 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு சென்று குப்பைகளின் ஈரக்கழிவுகளிலிருந்து, இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் இயந்திரம், இந்த வளம் மீட்பு பூங்காவில் பொருத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தின் எரிகலனில் 50 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகளை நிரப்பி, அதிலிருந்து 10 லிட்டர் வரை ஆயில் பெறப்படுகிறது. 

இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து உபயோகமான ஆயிலை அருகில் உள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். 

நிலம் மற்றும் நிலத்தடி நீரின் மாசுபாட்டை குறைக்க முடியும். மேலும், இருகூர் பேரூராட்சி பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சுகாதாரமான பேரூராட்சியாக மாற்றப்படும். இவ்வாறு, மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த 8ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி, இங்கு ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...