ஆழியார் பொதுப்பணித்துறை அதிகாரிக்கு குவியும் பாராட்டுகள்..! ஊரடங்கால் பாதிக்கபட்ட 50 குடும்பங்களுக்கு சொந்த செலவில் உதவி..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. ஆழியாறு பூங்கா பராமரிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில், அங்குள்ள மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. ஆழியாறு பூங்கா பராமரிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில், அங்குள்ள மக்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு, பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால், பூங்கா பராமரிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வறுமையில் தவித்தனர். 



வருமானம் இன்றி தவித்து வரும் அவர்களின் துயர நிலையை அறிந்த, ஆழியாறு அணையில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் மாணிக்கவேல், தனது சொந்த சேமிப்பு பணத்தில் இருந்து அவர்களுக்கு உதவ முடிவு செய்தார். பாதிக்கபட்ட மக்களின் தேவைகளை அறிந்து, 50 குடும்பங்களுக்கு தலா 650 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க திட்டமிட்டார். 

அதன்படி, முதற்கட்டமாக 33 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். பொதுப்பணித்துறை அதிகாரியின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...