கோவை: கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மூன்று தொகுதிக்கான வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்மரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது.

அதில், சிங்காநல்லூர் தொகுதியில் நர்மதா என்பவரும் வடக்கு தொகுதியில் பாலேந்திரன், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வகாப்(எ)தமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மீதம் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண்களும் 117 தொகுதிகளில் பெண்களும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.