திருப்பூரில் புதிய டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புதிய டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புதிய டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாநகரில் 57வது வார்டு பகுதியை சேர்ந்தது முருகம்பாளையம் எனும் பகுதி. இந்த பகுதியில் ஏற்கனவே 4 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும், தற்போது ஊருக்கே நடுவே அமைக்கப்பட்ட புதிய டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் சுற்றுவட்டாரத்தில் 4 கோவில்கள் இருப்பதாகவும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 3 செயல்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த டாஸ்மாக் கடையால் கோவிலுக்கு வரும் பெண்களுக்கும், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவியருக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், புதிதாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...