கோவையில் கால்களில் சலங்கை அணிந்தபடி கிராமிய தோல் இசைக் கருவிகளை இடைவிடாது 5 மணி நேரம் இசைத்து கல்லூரி மாணவர் சாதனை!

கோவை: கல்லூரி மாணவர் கால்களில் சலங்கை அணிந்தபடி பறை, பெரிய மேளம் மற்றும் துடும்பு, நையாண்டி ஆகிய கிராமிய தோல் இசைக் கருவிகளை இடைவிடாது 5 மணி நேரம் இசைத்து சாதனை படைத்துள்ளார்.


கோவை: கல்லூரி மாணவர் கால்களில் சலங்கை அணிந்தபடி பறை, பெரிய மேளம் மற்றும் துடும்பு, நையாண்டி ஆகிய கிராமிய தோல் இசைக் கருவிகளை இடைவிடாது 5 மணி நேரம் இசைத்து சாதனை படைத்துள்ளார்.



கோவையில் சூலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விமல்ராஜ். தனியார் கல்லூரியில் படித்து கொண்டே பீளமேடு பகுதியில் கிராமிய புதல்வன் கலை குழுவில் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமிய இசை கருவிகளை வாசிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், குழுவை சேர்ந்த டாக்டர் கலையரசனின் பயிற்சியில், மாணவன் விமல்ராஜ் தனது உலக சாதனை முயற்சியாக, கால்களில் சலங்கை அணிந்தபடி கிராமிய தோல் இசை கருவிகளான பறை, பெரிய மேளம், துடும்பு மற்றும் நையாண்டி என ஐந்து இசைகருவிகளை தொடர்ந்து ஐந்து மணி நேரம் வாசித்தபடி சாதனை புரிந்துள்ளார்.

இந்த நிலையில், இவரது இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, சலங்கை ஒலியுடன் தோல் இசைக் கருவிகளை தொடர்ந்து ஐந்து மணி நேரம் இசைத்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...