கோவை விளாங்குறிச்சி அருகே செல்போனை திருடிச் செல்ல முயன்றவரை நண்பர் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்து சிறையில் அடைப்பு!

கோவை: கோவை விளாங்குறிச்சி அருகே செல்போனை திருடிச் செல்ல முயன்றவரை நண்பர் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை விளாங்குறிச்சி அருகே செல்போனை திருடிச் செல்ல முயன்றவரை நண்பர் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

கோவை விளாங்குறிச்சி ரத்தினகிரி வீதி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ்(40). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை தனது செல்போனை ஜன்னல் அருகில் சார்ஜ் போட்டுவிட்டு தன் நண்பருடன் பேசி கொண்டு இருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தங்கராஜிடம் விலாசம் விசாரிப்பது போல் நடித்து செல்போனை திடீரென தூக்கிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த தங்கராஜ் தனது நண்பர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கோவில் பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பீளமேடு காந்தி மாநகர் பகுதியை சேர்ந்த சூர்யா(22) என்பதும், ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...