கோவையில் சொத்து தகராறில் கணவரின் சகோதரருக்கு சொந்தமான கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கும் இளம்பெண்! வைரலாகும் வீடியோ

கோவை: கோவையில் சொத்து தகராறில் இளம்பெண் ஒருவர் தனது கணவரின் சகோதரருக்கு சொந்தமான கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் சொத்து தகராறில் இளம்பெண் ஒருவர் தனது கணவரின் சகோதரருக்கு சொந்தமான கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியை சேர்ந்த தாமஸ் - கிரேசிமேரி தம்பதியரின் மகன்களான சார்லி மற்றும் சால்சன் ஆகியோர் அதே பகுதியில் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். கணவர் தாமஸ் உயிரிழக்கவே மூத்த மகனான சார்லியுடன் தாய் கிரேசிமேரி வசித்து வருகிறார். இளைய மகனான சால்சன் அருகிலேயே தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனது மாமனார் தாமஸ் பெயரிலுள்ள வீட்டை தன் பெயருக்கு மாற்றி தருமாறு மூத்த மகன் சார்லியின் மனைவி சூர்யா அவ்வப்போது, தனது மாமியாரான கிரேசிமேரியுடன் சண்டையிட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், நேற்று தனது தாயை காண்பதற்காக இளைய மகன் சால்சன் சென்ற போது, ஆத்திரமடைந்த சார்லியின் மனைவியான சூர்யா அருவருக்கத்தக்க வார்த்தைகளால் சால்சனை திட்டியபடியே, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை கற்களை கொண்டு கடுமையாக தாக்கி சேதப்படுத்தி உள்ளார்.



மேலும், இருசக்கர வாகனத்தையும் ஆக்ரோஷமாக கீழே தள்ளியதுடன் கற்களை கொண்டு வாகனத்தை சேதப்படுத்தி உள்ளார்.



இதனால் அதிர்ச்சியடைந்த சால்சன் மற்றும் அவரது தாய் கிரேசிமேரி ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, குடும்ப தகாறாரை தெருவிற்கு கொண்டு வந்து மோசமான வார்த்தைகள் பேசி ஆக்ரோஷமாக வாகனங்களை தாக்கும் இளம்பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...