கோவை: கோவையில் ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தின் கீழ் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் கருவி மூலம் கைரேகை பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்பணிகளில் காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தின் கீழ் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் கருவி மூலம் கைரேகை பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்பணிகளில் காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் நேரிடையாக ரேஷன் கடைக்கு சென்றால் மட்டுமே பொருட்கள் கிடைக்கும். இதற்காக ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் கருவி மூலம் கைரேகை பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,419 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் கோவை தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட 135 ரேஷன் கடைகளில் மட்டும் முதல் கட்டமாக இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்த ரேஷன் கடைகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த கருவிகள் 3ஜி சிம்கார்டு பொருத்தப்பட்டு உள்ளதால் இணையதள வேகம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் கைரேகையை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த புதிய திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் ரேஷன் கடைக்கு நேரில் சென்றால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பயோமெட்ரிக் கருவிகளில் 3ஜி சிம்கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இணையதள வேகம் போதிய அளவு கிடைப்பதில்லை. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் 4ஜி சிம்கார்டு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டும்,’’ என்று தெரிவித்தார்.