பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கோவையில் வரும் 9ம் தேதி இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

கோவை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து வரும் 9ம் தேதி மாவட்ட ஜமாஅத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் செஞ்சிலுவை சங்கம்‌ முன்‌பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து வரும் 9ம் தேதி மாவட்ட ஜமாஅத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் செஞ்சிலுவை சங்கம்‌ முன்‌பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், இது திட்டமிட்ட செயல் அல்ல என்றும் நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.



இந்த நிலையில், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றங்களே நீதியுடன்‌ தீர்ப்பு வழங்குங்கள்‌ என்கிற கோஷத்துடன்‌ கருப்புக்கொடி ஏந்தி மாபெரும் கண்டன போராட்டம்‌ வரும் 09ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவை செஞ்சிலுவை சங்கம்‌ முன்‌ நடைபெறும் என மாவட்ட ஜமாஅத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...