கோவையில் இரவு நேரத்தில் படுக்கை அறை ஜன்னலை திறந்து பார்க்கும் மர்ம நபர்; சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

திருப்பூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கொள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இரவு நேரம் வீட்டின் படுக்கை அறையை திறந்து பார்க்கும் மர்ம நபரால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை தடாகம் ரோடு, இடையர்பாளையம் பகுதியில் உள்ள பூம்புகார் நகர், மருதநகர், சீனிவாசன் நகர் என பல தெருக்கள் உள்ளது. கடந்த சில நாட்களாக, இந்த பகுதியில், ஒரு மர்ம நபரின் நடமாட்டம் இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடு ஜாமத்தில், மருதம் நகர் பகுதியில் ஒரு வீட்டின் காம்பவுன்டு சுவர் ஏறி ஒருவர் குதிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதையடுத்து, அந்த வீட்டில் உள்ளவர்கள் பக்கத்து வீடுகளில் குடியிறுப்பவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர்.

சுற்றி உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் விளக்குகளை போடவே, இதனை கண்டு அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் தப்பியுள்ளார்.



இதனையடுத்து, அங்கு பொருத்தபட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்த போது, இரண்டு மணி நேரத்தில் 10 வீடுகளின் படுக்கை அறையின் ஜன்னல் கதவை, அந்த நபர் திறந்து பார்த்து உள்ளது தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மேலும், கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை வைத்து, போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கடந்த ஒரு வருடதிற்கு முன், இதே போல் சம்பவம் நடந்த போது, அந்த நபர் சைக்கோவாக இருக்கலாம் என்று போலீசார் விட்டு விட்டனர். அதே போல, மீண்டும் தற்போது நடந்துள்ள சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...