டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க வீடு வீடாக ஆய்வு நடத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டம்

கோவை: கோவை மாநகரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் கீழ் கிழக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் வடக்கு என ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் முடிய துவங்கியதை அடுத்து இம்மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, கோவை மாநகர் பகுதிகளில் சாலைகள், சாக்கடைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. மேலும், வீடுகளில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்படும் டிரம்கள் போன்றவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பாக, எடுக்கப்பட்டு வருகின்றன.

அதில், மண்டல அளவிலான அலுவலர்கள் சுகாதார துறை அலுவலர்களுடன் இனைந்து தண்ணீர் தேங்குவதை கண்காணித்து, அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகுவதை கண்டறிந்து தடுப்பு மருந்துகள் தெளிப்பது மூலமாக, கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோவை மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகுவதை தடுக்க வீடு, வீடாக ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். டெங்கு கொசு புழுக்கள் வீட்டில் உபயோகிக்கும் தண்ணீர் டிரம்களில் உள்ளதா? வீட்டின் மேல்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அருகில் நீர் தேங்கியுள்ளதா? என ஆய்வு நடத்தி டெங்கு கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்படும்’’ என்றார்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...