கோவையில் 150 கடைகளுடன் அண்ணா மார்க்கெட் நாளை முதல் மீண்டும் திறப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி!

கோவை: கோவை சாய்பாபா காலனி அருகே மூடப்பட்ட அண்ணா மார்க்கெட் நாளை முதல் 150 கடைகளுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் திறக்கப்பட உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி அருகே மூடப்பட்ட அண்ணா மார்க்கெட் நாளை முதல் 150 கடைகளுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் திறக்கப்பட உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி அருகில் அண்ணா காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஜூலை மாதம் வியாபாரிகள் சிலருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அண்ணா மார்க்கெட் கால வரையின்றி மூடப்பட்டது.

இதையடுத்து, தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் தற்காலிகமாக அண்ணா மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மழை காரணமாக கல்லூரி மைதானத்தில் தண்ணீர் தேங்குவதால், வியாபாரம் பாதிப்பதாகவும், மீண்டும் அண்ணா மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, அண்ணா மார்க்கெட்டில் கடைகளைத் திறக்க அனுமதிப்பது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கடந்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் மார்க்கெட் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.



இதனிடையே, மார்க்கெட்டில் கடைகளை திறப்பது குறித்து இன்று அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பாக அண்ணா மார்க்கெட்டில் வியாபாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்திற்கு சங்க தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. செயலாளர் வகாப் முன்னிலை வகித்தார். இதில் அண்ணா மார்க்கெட்டில் இரு கடைகளுக்கு இடையே ஒரு கடையை காலியாக விட்டு, போதிய சமூக இடைவெளியுடன் வியாபாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "476 கடைகள் அண்ணா மார்க்கெட்டில் செயல்பட்டு வருகிறது. இதில் 150 கடைகளுடன் நாளை முதல் அண்ணா மார்க்கெட் திறக்கப்பட உள்ளது. வியாபாரிகள் சுழற்சி முறைகள் கடைகளை திறப்பார்கள். அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் செயல்படும். வாகனங்கள் உள்ளே வர அனுமதி இல்லை.

மேலும், அதிகாலை 3 மணிக்கு முன்னரே சரக்கு வாகனங்கள் காய்கறிகள் உள்ளிட்டவையை இறக்கி விட்டு செல்ல வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு கடைகள் செயல்படும். கடைகள் மீண்டும் திறக்க அனுமதி அளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாநகராட்சி நிர்வாகத்திற்கு வியாபாரிகள் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்," என்று தெரிவித்தனர்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...