கோவை: கோவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தானியங்கி கைக்கிருமி நாசினி தெளிப்பானை உருவாக்கியுள்ள 9ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக நாளுக்கு நாள் நோய்தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, கொரோனா தொற்று பரவலை தடுக்க கை சுத்தம் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. சோப்பைக் கொண்டு கை கழுவுவது சால சிறந்ததாக இருந்தாலும், நாம் எல்லா இடங்களிலும் அதை உபயோகப்படுத்த முடியாது. கிருமி நாசினி கொண்டு கையை சுத்தப்படுத்துவது மிகவும் எளிதாகவும், எல்லா இடங்களிலும் நாம் உபயோகப்படுத்துவதாகவும் உள்ளது. கையால் அல்லது காலால் மிதித்து உபயோகப்படுத்தும் கிருமி நாசினி தெளிப்பதனால், எல்லாரும் அதை தொடுவதால் கிருமி பரவுவதற்கான வாய்ப்பாக உள்ளது.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் வெ.மகிழன் எனும் மாணவன், சென்சார் மூலம் இயங்கும் தானியங்கி கைக்கிருமி நாசினி தெளிப்பானை உருவாக்கியுள்ளார்.
இந்த மாணவன் தானியங்கி கைக்கிருமி நாசினி தெளிப்பானை ரூ.400 என்ற குறைந்த விலையில் உருவாக்கி உள்ளார். இதை உருவாக்குவதற்கு 5 லிட்டர் அளவுள்ள மறு சுழற்சி பிளாஸ்டிக் கேன்களை உபயோகப்படுத்தி உள்ளது கூடுதல் சிறப்பாகும்.
கடந்த இரண்டு மாதங்களாக உபயோகத்தில் இருக்கும் இந்த தானியங்கி கைக்கிருமி நாசினி தெளிப்பான் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. இதை மருத்துவமனைகள் மட்டுமின்றி மக்கள் அதிகமாக பணிபுரியும் தொழில் நிறுவனங்களிலும் இதை உபயோகிக்கலாம்.
இதனிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தானியங்கி கைக்கிருமி நாசினி தெளிப்பானை உருவாக்கியுள்ள மாணவன் மகிழனை மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் அவர்களும் ஊக்குவித்து பாராட்டினார்.