திருப்பூரில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அரசு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா!

திருப்பூர்: உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு திருப்பூரில் அரசு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.


திருப்பூர்: உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு

திருப்பூரில் அரசு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2020ம் ஆண்டு உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் "சுற்றுலா மற்றும் கிராம மேம்பாடு" ஆகும்.

இந்நிலையில், சுற்றுலாத்துறையில் கொரோனா வைரசால் COVID-19 ஏற்பட்ட தாக்கம் மற்றும் மீண்டு வருவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு இடையே கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலா அதிகாரி T.அரவிந்தகுமார் காணொலி வாயிலாக நம்பிக்கை உரையாற்றினார்.

இந்த விழாவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா துறையின் சார்பாக வினாடி-வினா போட்டியும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடையே கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.



இந்த நிலையில், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களான மதன்ராஜ் (முதலிடம்) ஹாசிரா பானு (இரண்டாமிடம்) அஸ்விகா (மூன்றாமிடம்) ஆகியோருக்கும், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் தன்யா ஸ்ரீ(முதலிடம்), ஹேமச்சந்திரா (இரண்டாம் இடம்), மாரி செல்வம் (மூன்றாம் இடம்) ஆகியோருக்கும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்தகுமார் ஆகியோர் இணைந்து பரிசுகளையும், சான்றிதழ்களையும் அளித்தனர்.



மேலும், தமிழக அரசு சுற்றுலாத் துறையால் நடத்தப்பட்ட உலக சுற்றுலா தின விழா மற்றும் மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று பணியாற்றி மாவட்ட சுற்றுலாத் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக ஆசிரியர் ஜவஹர் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளித்தார்.



இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் அவர்கள் பங்கேற்றார். விழாவிற்கான ஏற்பாட்டினை மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் செல்வராஜ் மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்டனர்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...