திருப்பூர்: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ததற்கு எதிராக திருப்பூரில் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கடந்த வாரம் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் திட்டமிட்டு பாபர் மசூதி இடிக்கவில்லை எனவும் தடுப்பதற்காகவே சென்றார்கள் என 36 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிபிஐ இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் ரயில் நிலையம் எதிரே இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.