உத்தரப் பிரதேசத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய பொருளாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்!

கோவை: உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய பொருளாளரை கைது செய்ததை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய பொருளாளரை கைது செய்ததை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் தலித் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அந்தப் பெண்ணின் உடல் உறவினர்களிடம் கூட ஒப்படைக்கப்படாமல் எரிக்கப்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்தும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்கும் காவல்துறையினரை கண்டித்து பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதனிடையே, நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பின் தேசிய பொருளாளர் அதீக்குர் ரஹ்மான் மற்றும் அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.



இந்த நிலையில், இதனை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மத்திய அரசை கண்டித்தும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் மற்றும் காவல் துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், கேம்பஸ் பிரன்ட் தேசிய பொருளாளர் அதீக்குர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...