திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி இயந்திரங்களை விற்று 20 வருடங்களாகியும் பணத்தை வழங்காத நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்குட்பட்ட கேத்தனூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் 1999ம் ஆண்டு பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்த சூழ்நிலையில், இயந்திரங்களை சாய ஆலை நடத்திவரும் நாகராஜன் என்பவரிடம் விற்றுள்ளார். இதற்கான தொகை 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அவர் காசோலையாக வழங்கியுள்ளார்.
ஆனால், வங்கி கணக்கில் பணமில்லை என வங்கியில் இருந்து திரும்பி வந்த நிலையில், 20 வருடமாக பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வருவதாகவும் இது குறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் விசாரணைக்காக அழைத்து உரிய பதில் இல்லாமல் அனுப்பி வைத்து வருவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 86 வயதான நாராயணசாமி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து முதியவர் போராட்டத்தை கைவிட்டு விசாரணைக்காக சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.