கோவை: கோவை பிஎன் புதூர் அருகே பணி செய்ய பிடிக்காததால் முன்னாள் வேளாண் துறை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பிஎன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(36). இவருக்கு மீனா என்பவருடன் திருமணமாகி இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிரகாஷ் வேளாண் பல்கலைக்கழகத்தில் பத்து ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
இதன் பின்னர் வேலையை ராஜினாமா செய்த அவர், தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். பிரகாசிற்கு தான் பணியாற்றும் தனியார் கம்பெனியில் வேலை செய்ய பிடிக்காமல் மன வேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விரக்தியில் இருந்த பிரகாஷ் தனது மனைவி மீனா வெளியே சென்று இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்ற மீனா வீடு திரும்பி வந்து பார்த்தபோது, பிரகாஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிரகாஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அப்போது, அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சாய்பாபா காலனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.