கோவை சர்வதேச விமான நிலையத்தில் அதிகரிக்கும் உள்நாட்டு விமான சேவைகள் - பயணிகள் மகிழ்ச்சி!

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவங்கியது. துவக்கத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை ஐந்தாக இருந்தது.

தொடர்ந்து கூடுதல் வான் வழித்தடங்களில் விமான நிறுவனங்கள் சர்வீஸ் அறிமுகப்படுத்தி வருவதால் கோவையில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் சார்பில் அகமதாபாத் மற்றும் பூனே இடையே வரும் அக்டோபர் 26ம் தேதி முதல் புதிய விமான சர்வீஸ் துவக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் விமான சர்வீஸ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது சராசரியாக தினமும் 12 விமானங்கள் முதல் அதிகபட்சமாக 19 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் கூடுதலாக விமான சர்வீஸ் துவக்கப்படும் பொழுது தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. " என்று கூறினார்.

Newsletter

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...

கோவையில் இரண்டு மாத ஊதியம் தராததால் உரிமைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

கோவையில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால்...