கோவை வெரைட்டி ஹால் சாலை அருகே பேருந்தின் படியில் நின்று பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு!

கோவை: கோவை வெரைட்டி ஹால் சாலை அருகே பேருந்தின் படியில் நின்று பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை வெரைட்டி ஹால் சாலை அருகே பேருந்தின் படியில் நின்று பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வையம்பட்டி பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் ஆகாஷ் (20). இவர் கோவையில் உள்ள தனியார் அடுமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை தனியார் பேருந்தில் தொண்டாமுத்தூர் செல்ல காந்திபுரம் பகுதியில் ஏறியவர் படியில் நின்று பயணம் செய்த நிலையில், வெரைட்டி ஹால் சாலை அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது, அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

படியில் நின்று பயணம் செய்யாதீர்கள் என்ற எச்சரிக்கையை மீறி பயணம் செய்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...

கோவையில் இரண்டு மாத ஊதியம் தராததால் உரிமைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

கோவையில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால்...