கோவை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் மீண்டு எழ உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் - தொழில் முனைவோர்களின் வலியுறுத்தல்

கோவை: தென் இந்தியாவின் மென்செஸ்டர் என அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தொழில் நிறுவனங்கள் மீண்டு எழ முடியாத சூழ்நிலையில் உள்ளதால் தொழில் நிறுவனங்கள் மீண்டு எழ உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என தொழில்முனைவோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை: தென் இந்தியாவின் மென்செஸ்டர் என அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தொழில் நிறுவனங்கள் மீண்டு எழ முடியாத சூழ்நிலையில் உள்ளதால் தொழில் நிறுவனங்கள் மீண்டு எழ உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என தொழில்முனைவோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன.

இதில் கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழிற்நிறுவனங்களும், மாநகராட்சிப் பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறுவனங்களும் உள்ளன. உலகளவில் அதிக அளவிலான வெட் கிரைண்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கோவை மாவட்டத்தில் மட்டுமே உள்ளன. பம்புகள் தயாரிக்கும் தொழிற்நிறுவனங்கள் விவசாயத்திற்கு மிக முக்கிய பங்கு வகிப்பதால் கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்கள் இந்திய அளவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அதேபோல, கோவையில் குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். அதில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக, ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பனர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஜாப் ஆர்டர்கள் குறைவு, ஆட்கள் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, விற்பனை மையங்களில் விற்பனை சரிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக தொழில் நிறுவனங்கள் வாழ்வா, சாவா போராட்டத்தில் தொழிலை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கோயமுத்தூர் சிட்கோ இண்டஸ்ட்ரியல் மேனுபேக்சரிங் வெல்பேர் ஆசோசியேசன் (கோசிமா) துணைத் தலைவர் மதிவாணன் கூறுகையில், கோவை சிட்கோவில் 350க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வங்கிகள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே தொழில் நிறுவனங்கள் மீண்டு எழ முடியும். உடனடி நிவாரணமாக ரூ.1 லட்சம் கடன் எந்த நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும். ஜாப் ஆர்டர்கள் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே தற்போது கிடைக்கிறது. தொழில் தெரிந்த ஆட்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது, என்றார்.

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட ஊரக தொழில் முனைவோர் சங்கத்தினர் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறுகையில், காட்மா சங்கத்தின் கீழ் 4500க்கும் மேற்பட்ட சிறு,குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஜாப் ஆர்டர்களை நம்பியே இந்த தொழில் நிறுவனங்கள் உள்ளன. வங்கிகளிடம் வாங்கிய கடனை செலுத்த 6 மாத கால கடன் அவகாசம் அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், அதே சமயம் தற்போது 6 மாத கால கடனுக்கு ஒர் கடன் வழங்குவது போல் வழங்கி அதனை மீண்டும் ஒரு தவணையில் வங்கிகள் எடுத்துக்கொள்கின்றன. அதற்கும் சேர்த்து தற்போது வட்டி, கடன் கட்ட வேண்டியுள்ளது. ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு அதன் அடிப்படையில் வங்கிகளில் கடன் அளிக்கப்பட்டது. ஆனால், கடன் வாங்காமல் தொழிலை நடத்தியவர்களுக்கு கடன் பெரும்பாலும் கிடைக்கவில்லை. எனவே, உடனடி நிவாரணமாக சிறு வணிகர்களுக்கு கடன் வழங்குவது போது முத்ரா கடன் திட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கு தேவைகளுக்கு ஏற்றவாறு கடன் வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தொழிலை நடத்துவது என்பது மறுபிறப்பிற்கு சமமாகும், என்று கூறினார். 

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் கோவை மாவட்டம் (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், கடும் நெருக்கடியில் உள்ள தொழில் நிறுவனங்களை பாதுகாக்க அரசு குறுந்தொழில் முனைவோர்களின் நலன் கருதி எவ்வித நிபந்தனை இல்லாமல், பினை இல்லாமல் உடனடியாக கடன் வழங்கிட வேண்டும். அதை திருப்பி செலுத்த ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கிட வேண்டும். நிவாரணமாக உடனடியாக ரூ.1 லட்சம் அனைத்து குறுந்தொழில் முனைவோர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். குறுந்தொழில்கள் தான் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது,’’ என்றார்.

இதுகுறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறுகையில், ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் பல்வேறு வருவாய்களை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கிற்கு பின் மீண்டும் தொழிலை புதிதாக தான் துவங்கியுள்ளோம். நிபந்தனைகள் இல்லாமல் வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும். அதற்கான அறிவிப்புகள் முற்றிலும் இல்லை, என்று தெரிவித்தார்.

Newsletter

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...

கோவையில் இரண்டு மாத ஊதியம் தராததால் உரிமைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

கோவையில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால்...