கோவையில் அனைத்து ஊடகவியலாளர்கள் சார்பில் உத்தரப்பிரதேச அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து ஊடகவியலாளர்கள் சார்பில் உ.பி அரசையும், காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து ஊடகவியலாளர்கள் சார்பில் உ.பி அரசையும், காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

உத்தரப்பிரதேச மாநிலம் ஜத்திராஸில் தலித் இன பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த அப்பெண்ணின் உடலை உறவினர்களிடம் கூட வழங்காமல் காவல்துறையினர் எரித்துவிட்டனர். 

இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களையும் செய்தி சேகரிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதையும் தாண்டி செய்தி சேகரிக்க சென்ற பெண் ஊடகவியலாளர் மற்றும் ஒளிப்பதிவாளரையும் அங்குள்ள காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், தொடர்ந்து மூன்று நாட்களாக அங்கேயே இருந்த பெண் செய்தியாளர் செய்தி சேகரிக்க முயன்றார். 

இந்நிலையில், செய்தியாளருக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து ஊடகவியலாளர்கள் சார்பில் உ.பி அரசையும், காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்தை கண்டித்தும் காவல்துறையினரை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...

கோவையில் இரண்டு மாத ஊதியம் தராததால் உரிமைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

கோவையில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால்...