திருப்பூர்: திருப்பூரில் தனது வீட்டை ஆக்கிரமித்து வெளியேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் மற்றும் மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட அவிநாசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிராஜ். இவரது மகள் வளர்மதி மற்றும் பேத்தி நிர்மலா தேவியுடன் வசித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கோபிராஜ் உயிரிழந்த நிலையில், அவர் வசித்து வந்த வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த சாய்ராம் என்பவர் ஆக்கிரமித்து வளர்மதி மற்றும் நிர்மலா தேவி ஆகியோரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தால் கொலை செய்து விடுவதாக ஆட்களை வைத்தும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அச்சமடைந்த வளர்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், கணவனை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வரும் தனக்கு தற்போது எந்தவித வாழ்வாதாரம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி மகள் நிர்மலா தேவியுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர் .
அப்போது, உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் தாய் மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.