பொள்ளாச்சி ஜோதி நகர் நட்சத்திர பூங்காவில் காய்கறிகள் மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்து அசத்தும் நகராட்சி ஊழியர்கள்..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை பெறப்பட்டு, உரம் தயாரிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை பெறப்பட்டு, உரம் தயாரிக்கப்படுகிறது. 

நல்லூர் குப்பை கிடங்கில் இயற்கை உரம் தயாரிப்பதுடன், அழகாபுரி வீதியில், மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. அந்தந்த பகுதிகளில் பெறப்படும் மக்கும் குப்பையை கொண்டு உரம் தயாரித்து, இயற்கை முறையில் குடியிருப்பு பகுதிகளில், உள்ள பூங்காக்களில் காய்கறி சாகுபடி செய்யும் திட்டத்தை, பொள்ளாச்சி நகராட்சி முதற்கட்டமாக செயல்படுத்தி வருகிறது. 



இதற்காக, ஜோதி நகர் நட்சத்திர பூங்கா, எஸ்.ஆர் லே-அவுட், முல்லை நகர், அழகாபுரி வீதி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ஜோதிநகர் நட்சத்திர பூங்காவில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மொச்சை, தக்காளி, அவரை, பீர்க்கங்காய், அரைக்கீரை மற்றும் சிறு கீரைகள், நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. 

காய்கறி, நிலக்கடலை சாகுபடி செய்யப்படும் பணியை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் துவக்கி வைத்தார். சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் உட்பட பலர் இதில் பங்கேற்றனர். இந்த திட்டத்தை குறித்து,அதிகாரிகள் கூறுகையில், நட்சத்திர பூங்காவில் இட வசதி உள்ளதால் காய்கறிகள், நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்பட்டு தேவையான உரங்கள் இடப்படும், என்றனர்.

Newsletter

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...

கோவையில் இரண்டு மாத ஊதியம் தராததால் உரிமைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

கோவையில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால்...