கோவை மாங்கரை அருகே, யானை தாக்கி ஒருவர் பலி..!

கோவை: கோவை வனசரகத்திற்கு உட்பட்ட தடாகம் தெற்கு பகுதியான மாங்கரை காப்புக்காட்டில், ஒற்றை யானை தாக்கி 64 வயதுடைய முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை வனசரகத்திற்கு உட்பட்ட தடாகம் தெற்கு பகுதியான மாங்கரை காப்புக்காட்டில், ஒற்றை யானை தாக்கி 64 வயதுடைய முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் பகுதியில், அரசு விதிகளை மீறி அதிகளவு செங்கல் சூலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை, முழுக்க முழுக்க யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டபட்டவை. இதனால், அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாகிவிட்டது. 

இன்று, மாங்கரை சேர்ந்த செல்வம் என்பவர் தன் கால்நடைகளை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். சிறிது, நேரத்தில் கால்நடைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதால், அதை தேடி காட்டிற்குள், சென்ற செல்வத்தை அங்கிருந்த ஒற்றை காட்டு யானை தாக்கி உள்ளது. அதில் பலத்த காயம் அடைந்த செல்வம், பரிதாபமாக அங்கேயே இறந்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த வனதுறையினர், உடலை கைப்பற்றி மாங்கரை சோதனை சாவடிக்கு அருகில் கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்க 108 க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்த உதவிக்குழுவினர் பரிசோதனை செய்ததில், தாக்கப்பட்டவர் உயிரிழந்து விட்டாதாக கூறினார்.

மேற்ப்படி, பிரதே பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தடாகம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...