கோவையில் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

கோவை வெள்ளலூர் அடுத்த கோணவாய்க்கால் பாளையம், கருப்பராயன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினரின் 17 வயது மகளை ஏமாற்றி கடத்தி திருமணம் செய்தகூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.







கோவை: கோவை வெள்ளலூர் அடுத்த கோணவாய்க்கால் பாளையம், கருப்பராயன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினரின் 17 வயது மகளை ஏமாற்றி கடத்தி திருமணம் செய்தகூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திடீரென சிறுமி காணாமல் போனதால், இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்த நிலையில், சிறுமியை பழைய தாராபுரம் ரோடு, பழனி காந்திபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (23) என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

இது குறித்து, பழனி போலீஸார் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் இளம் ஜோடி ஒருவர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, போத்தனூர் போலீஸார் விக்னேஷ் மற்றும் சிறுமியை மீட்டு கோவைக்கு கொண்டு வந்தனர்.

சிறுமியின் வீட்டுக்கு அருகில் விக்னேஷ் வெல்டிங் வேலை செய்து வந்த போது சிறுமிக்கும் விக்னேஷ் இடையே பழக்கம் ஏற்பட்டதும், திருமண ஆசை வார்த்தை கூறி விக்னேஷ் சிறுமியை பழனிக்கு அழைத்து சென்று திருமணம் செய்ததும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போலீஸார் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...