கோவை மாவட்டம், பொள்ளாச்சி கொள்ளுப்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது. அவர்களிடம் இருந்து, 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாகி உள்ள மூதாட்டியை குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி கொள்ளுப்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது. அவர்களிடம் இருந்து, 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாகி உள்ள மூதாட்டியை குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி, கோமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொள்ளுப்பாளையம், எஸ்.சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி, அப்பகுதியில் ரோந்து மேற்கொண்ட பொழுது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த, பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேரு நகரை சேர்ந்த மனோஜ்குமார்(29), பொள்ளாச்சி மரப்பேட்டையைச் சேர்ந்த மதுரை பாண்டி(40), ஆகிய இருவரிடம் சோதனையிட்டபோது, அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கோமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், இவர்கள் இருவரும் பொள்ளாச்சி எஸ்.சந்திராபுரம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி மகாலட்சுமி என்பவரிடம் கஞ்சா விலைக்கு வாங்கி வந்து, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், சுமார் 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து மூதாட்டி மகாலட்சுமியை தேடி வருகின்றனர்.