கோவையில் அடியாட்களை கொண்டு மிரட்டுவதாக பஜாஜ் நிறுவனத்தை கடன் பெற்றவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

கோவை: கோவை பந்தய சாலையில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை அங்கு கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை பந்தய சாலையில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை அங்கு கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இது குறித்து கடன் பெற்றவர்கள் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 6 மாதங்களாக வாழ்வாதாரம் இன்றி அவதிப்பட்டு வரும் நிலையில், பணத்தை உடனடியாக திருப்பி செலுத்த வலியுறுத்தி அடியாட்களை கொண்டு மிரட்டுவதாகவும், வீட்டிற்கு வரும் நிதி நிறுவனத்தை சாராத ஆட்கள் பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசுவதாகவும் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கூறுகையில், கடந்த 2018ம் ஆண்டு புதிய ஆட்டோ வாங்க இந்த நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று மாதம் ரூ.5,620 பணம் முறையாக செலுத்தி வந்த நிலையில், பிப்ரவரி மாதத்திற்கு பின் ஊரடங்கு காரணமாக பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவிப்பின்படி ஆட்டோக்கள், கால் டாக்சி போன்றவவை இயக்கபடாததன் காரணமாக பெரும்பாலானவர்கள் தினசரி வருமானத்திற்கு அவதிப்பட்டு வருவதாகவும் இந்த சூழலில் பணத்தை உடனடியாக செலுத்த வற்புறுத்தல் செய்வது சரியல்ல என தெரிவித்தனர். மேலும், நிதி நிலைமை சீரடையும் வரையில் தங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இதனிடையே, முற்றுகை குறித்த தகவலறிந்த பந்தய சாலை போலீசார் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இங்குள்ள அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக குற்றம்சாட்டினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பலர் இவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...