நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளில் 6 பேர் உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் காேடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம்சாட்டப்பட்டு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் இன்று (செப்., 08) ஆஜராக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், இரண்டு பேர் மற்றும் மனோஜ் சாமி, உதயன், பிஜு குட்டி, ஜிதின் ஜாய் ஆகிய 6 பேர் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கு குறித்து அரசு வழக்கறிஞர் வாதத்தின் போது, இந்த வழக்கை தினசரி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவு நகலை வரும் வெள்ளிக்கிழமை சமர்பிப்பதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை வழக்கை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இது குறித்து எதிர்தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசும் போது, தினசரி இவ்வழக்கை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது. அதன் உத்தரவு நகலை வெள்ளிக்கிழமை சமர்ப்பிப்பதாக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். அதன் உத்தரவு நகலை பார்த்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த வழக்கு குறித்து அரசு அதிக ஆர்வம் காட்டுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக தெரிவித்தார்.