கொடிசியாவில் செயல்படும் சித்த பிரிவில் கொரோனா நோயளிகளுக்கு வாசனை நுகரும் திறனை மீட்க ஒம பொட்டலம் வழங்கல்

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு வரும் கொரோனா சிறப்பு மையத்தில், சித்த மருத்துவ சிகிச்சை மூலம் நுகரும் திறனை மீட்டெடுப்பதற்காக, ஓம பொடி பொட்டலம் வழங்கி அதை அடிக்கடி நுகர்ந்து வாசனை பிடிக்க சொல்லி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு வரும் கொரோனா சிறப்பு மையத்தில், சித்த மருத்துவ சிகிச்சை மூலம் நுகரும் திறனை மீட்டெடுப்பதற்காக, ஓம பொடி பொட்டலம் வழங்கி அதை அடிக்கடி நுகர்ந்து வாசனை பிடிக்க சொல்லி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவ்வாறு, தொடர்ந்து ஐந்து நாட்கள் நுகர்ந்து ஓம பொடி பொட்டலத்தின் வாசனையை பிடித்தவர்களுக்கு, மூக்கின் நுகரும் திறன் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது என்று சொல்லபடுகிறது.

இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி, தனம் கூறுகையில்:

கோவையில் அறிகுறி இன்றி கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு, கொடிசியா வளாகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதல் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் அமுக்கரா சூரண மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், திரிபலாசூரணம், ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.

மேலும், நுகரும் திறனை இழந்தவர்களுக்கு, அதனை மீட்கும் விதமாக ஓம பொடி பொட்டலம் வழங்கப்படுகிறது.

இந்த பொடியை 5 கிராம் அளவில் துணியில் பொட்டலமாக முடிந்து வைத்து, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த பொட்டலத்தை மூக்கில் வைத்து நுகர்ந்தால் விரைவில் நுகரும் திறன் மீட்கப்படும். கோவையில் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் 300-க்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்,என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...