குண்டும், குழியுமான சாலை: 'பரலோகம் செல்ல விரும்புவோர் எங்கள் பகுதிக்கு வரவும்' - இப்படிக்கு கோவை 97 வது வார்டு பகுதி மக்கள்

கோவை: "பரலோகம் செல்ல எங்கள் பகுதியில் பாதை அமைக்கப்பட்டுள்ளது செல்ல விரும்புவோர், எங்கள் பகுதிக்கு வாருங்கள்" என கோவை, சுந்தராபுரத்தில் இருந்து மதுக்கரை செல்லும் வழியில் உள்ள மோகன் நகர் 97 வது வார்டு மக்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலயத்தளங்களில் பரவி வருகிறது.






கோவை: "பரலோகம் செல்ல எங்கள் பகுதியில் பாதை அமைக்கப்பட்டுள்ளது செல்ல விரும்புவோர், எங்கள் பகுதிக்கு வாருங்கள்" என கோவை, சுந்தராபுரத்தில் இருந்து மதுக்கரை செல்லும் வழியில் உள்ள மோகன் நகர் 97 வது வார்டு மக்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலயத்தளங்களில் பரவி வருகிறது. 



"பரலோகம் செல்வதற்காக பாதை அமைக்கப்பட்டுள்ளது எனவும் அதுவும் வீட்டு வாசலில் இருந்து கால் எடுத்து வைத்தாலே மிக எளிதில் சென்றடைந்து விடலாம். இந்த திட்டப்பணிகளை, மிக சிறப்பாக முடித்துக் கொடுத்த எல்என்டி அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்கு இந்த வாய்ப்பை அளித்து எங்களுக்கு இந்த வசதியை செய்துகொடுத்த அதிகாரிகள் அனைவருக்கும் இருகரம் கூப்பி வாழ்த்தி வணங்கி மனமார நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வாட்ஸ் அப் குரூப்பில் வைரலாகி வருகிறது. 



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்: 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் குழிகளை தோண்டியது. அதை சரிவர மூடப்படாத காரணத்தால், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதாகவும், மீண்டும் சரிசெய்யும் பணிகளின் போது முறையாக மூடவில்லை.



கடந்த சில தினங்களுக்கு, முன் பெய்த மழை காரணமாக சாலைகளின் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறிய இப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் பணிகள் மேற்கொள்ள வந்தபோது, ஏற்கனவே தோண்டபட்ட சாலைகளை சரி செய்த பின்னர் இந்த பணிகளை துவக்க வேண்டும், என பொதுமக்கள் தெரிவித்ததால் திரும்பி சென்றனர், என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...