கோவை: மேட்டுப்பாளையத்தில் தீவிரமடையும் பருவமழை காரணமாக மலைப் பகுதியிலிருந்து சமதள பரப்பை நோக்கி வண்ணத்துப்பூச்சிகள் இடப்பெயர்ந்து வருகின்றன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கல்லார், ஓடந்துறை, கோத்தகிரி சாலை, உதகை சாலை போன்ற இடங்களில் தற்போது பருவமழை காரணமாக ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் மலைப்பகுதிகளில் இருந்து தற்போது இடம் பெயர்வது அதிகரித்து காணப்படுகிறது.
பொதுவாக வண்ணத்துப்பூச்சிகள் இடப்பெயர்ச்சி என்பது பருவமழைக்கு முன்னரும், பருவமழைக்கு பின்னரும் என்ற கால நிலையை காட்டுவதாக இருக்கும் தற்போது பருவமழை நல்லமுறையில் பெய்து வருவதால் வண்ணத்துப்பூச்சிகள் காடுகளிலிருந்து சமதளத்தை நோக்கி தற்போது கூட்டம் கூட்டமாக வரத் துவங்கியுள்ளது.

பல வண்ண நிறங்களில் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் படையெடுக்கும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் இயற்கையின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தங்களது இடங்களை மாற்றி அமைத்துக் கொள்வதால் இந்த இடப்பெயர்ச்சி நிகழ்வு ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் ஏற்படும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், இயற்கையின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய இந்த பட்டாம்பூச்சிகள் சரியான நேரங்களில் தங்கள் இடப்பெயர்ச்சி நிகழ்த்துவதால் இயற்கை சமநிலைப்படுவதுடன் விவசாய விளை நிலங்களில் மகரந்த சேர்க்கை போன்ற விஷயங்களுக்கும் இது அடித்தளமாக அமையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.