கோவை: கோவை பாரதியார் பல்கலைகழகத்தை நிர்வாகிக்க சிண்டிகேட் குழு செயல்பட்டு வருகிறது. இதில் பாரதியார் பல்கலைகழகத்தை சார்ந்தவர்களை தவிர, இருவர் வரை வெளியில் இருந்து உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

மூன்று ஆண்டுகள் வரை அவர்களது பதவி காலம் இருக்கும். தற்போது, வெளியில் இருந்து நியமிக்கப்பட்டவர்களின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் அப்பதவிக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால், கோவையை சேர்ந்த பா.ஜ.க மாநிலத் துணை தலைவர் கனகசபாபதி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இவர், பா.ஜ.க மாநிலத் துணை தலைவராக உள்ள நிலையில், இவரை நியமனம் செய்ய சட்டரீதியாக எந்த தடையும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து பல்கலைகழக ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்:
கடந்த முறையும் இவர் சிண்டிகேட் குழு உறுப்பினராக இருந்தார். எனவே, இந்த முறையும் இவரையே அப்பதவிக்கு நியமிப்பதற்கு பதிலாக, வேறு யாருக்காவது வாய்ப்பளிக்கலாம். மேலும், கடந்த முறை அவர் நியமனம் செய்யப்பட்ட போது, அவர் கட்சி சார்பாக எந்த பதவியும் வகிக்கவில்லை. ஆனால், இம்முறை அவர் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவராக உள்ளார். இதனால், பல்கலைகழகத்தினர் மத்தியில் சற்று அதிருப்தி நிலவி வருகிறது,, என்றார்.
இது குறித்து பேராசிரியர் கனகசபாபதி கூறுகையில்:
நான் கல்வியாராக பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். 15 வருடங்களுக்கும் மேலாக கல்வி பணியில் உள்ளேன். ஆளுநர் நியமனத்திற்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சென்ற பதவி காலத்திலும், நான் எனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை நேர்மையாக செய்துள்ளேன். சிண்டிக்கேட் குழுவிலும், எந்த எதிர்ப்புகளும் எழவில்லை.
எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட நேர்மையாக செய்வேன். நிர்வாக ரீதியாக யாருக்கும் எதுக்காகவும் பரிந்துரை செய்தது இல்லை, என்றார்.