கோவை: பொள்ளாச்சி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய, விபத்தில் பனியன் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி பகுதியிலிருந்து பல்லடம் காமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் தொழிற்சாலைக்கு இன்று காலை வழக்கம்போல் பணியாளர்களை அழைத்துக்கொண்டு, ஆனைமலை-உடுமலை ரோட்டில் வேன் சென்று கொண்டிருந்தது.

அப்போது, துறையூர் அருகே சாலையின் இடது புறத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனின், முன்பகுதியில் அமர்ந்திருந்த, அங்கலக்குறிச்சியை சேர்ந்த ரஞ்சித்குமார் (27), வேனில் பயணம் செய்த, அங்கலக்குறிச்சியை சேர்ந்த புவனேஷ்வரி (32), ஜான்சி மற்றும் வேனை ஓட்டி வந்த தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக்பிரபு (29) ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற ஆழியார் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக, கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ரஞ்சித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், விபத்து குறித்து ஆழியார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.