காலையில் ஆன்லைன் வகுப்பு..! மாலை நேரம் விவசாயம்.. கலக்கும் கோவை தனியார் பள்ளி..!

கோவை: நம்முடைய சிறுவயதில் போன் என்றாலே அப்பாவுடையதாக இருக்கும். ஆனால், தற்போது அனைத்து வீடுகளிலும் இருக்கும் எல்.கே.ஜி குழந்தைகளிடமே மொபைல் போன் அத்தியாவசியமாகிறது.

கோவை: நம்முடைய சிறுவயதில் போன் என்றாலே அப்பாவுடையதாக இருக்கும். ஆனால், தற்போது அனைத்து வீடுகளிலும் இருக்கும் எல்.கே.ஜி குழந்தைகளிடமே மொபைல் போன் அத்தியாவசியமாகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து குழந்தைகளும் ஆன்லைனில் தான் படிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதில் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறார்கள். இந்த பிரச்சனை இப்படி இருக்க தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாதம் 20,000 முதல் 25,000 சம்பளம் வாங்கி கொண்டிருந்த பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலை ஊரடங்கால் தலைகீழாக மாறிவிட்டது. 

அறிவியல் படித்த ஆசிரியர் ஆடு மேய்க்கிறார். தமிழ் படித்த ஆசிரியர் காட்டு வேலைக்கு போகிறார் என்ற செய்திகள் தினம் தினம் பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருக்கிறது. இதை எல்லாம் பொருட்டாக நினைக்காமல் ஆன்லைன் கல்வியுடன், விவசாய கல்வியும் வழங்கி வருகிறார்கள் கோவை சேர்ந்த தனியார் பள்ளியான புனித ஜான்ஸ் பள்ளி. 

கல்வியுடன் நம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்கள், நாட்டின் முதுகெலும்பு ஆன விவசாயத்தை பதினொன்றாம் வகுப்பில் ஒரு பிரிவாகவும் வைத்து கற்றுக்கொடுத்து வருகிறார்கள். ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிகளில் மாணவர்கள் இருக்க மாட்டார்கள். எனவே, பள்ளி விளையாட்டு வளாகத்தில் 1 1/2 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யக்கூடிய இடத்தை தேர்வு செய்து நாட்டு பயிர்களை இட்டு விளைவித்து வருகிறார்கள்.

இது குறித்து பள்ளி முதல்வர் பாஸ்கர் அவர்களிடம் பேசிய போது 2016ம் ஆண்டில் இருந்தே எங்கள் பள்ளியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். தமிழகத்திலேயே முதன் முறையாக விவசாயம் சார்ந்த பிரிவை பதினொன்றாம் வகுப்பில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் விவசாய படிப்புக்கு தேவையான அடிப்படை செயல்முறை கல்வியை இங்கே கற்றுக்கொள்வார்கள். பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் கூட வகுப்பில் உள்ள மாணவர்களை இங்குள்ள தோட்டத்திற்கு அழைத்து வருவோம். 



அவர்களே செடிகளுக்கு தண்ணீர் விடுவர், களை எடுப்பர், அதில் விளையும் காய்களை வீட்டிற்கு எடுத்து செல்வர். இதன் மூலம் விவசாயத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ளவும், பாடங்களில் இருக்கும் இரு பக்கங்களை படிப்பதை விட செய்முறை கல்வி மூலம் அனைத்தும் புரிய வைத்து விட முடியும் என் நம்பினோம். அதில் நல்ல பலனும் கிடைத்தது. 

ஆனால், கொரோனா ஊரடங்கால் மாணவர்களின் கல்வி மட்டும் இல்லாமல் ஆசிரியர்களின் வேலையும் கேள்வி குறியாக இருப்பதையும் அன்றாட வாழ்வின் தேவைக்காக கஷ்டப்படுகிறார்கள் என்பதை கேள்விப்பட்டோம். எங்கள் பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியர்களில் சிலர் ஆடு மேய்ப்பதாகவும், காட்டு வேலைக்கு செல்வதாகவும் தெரிந்தது. அதனால் அவர்களுக்கு உடனே போன் செய்து இங்கு அழைத்தோம். 



எங்கயோ செய்யும் வேலையை நம் பள்ளியிலே செய்யுங்கள் என்றோம். இது கட்டாயம் அல்ல; ஈடுபாடு இருந்தால் செய்யுங்கள் என்றோம். அதே போல் காலையில் ஆன்லைனில் பாடம் எடுப்பதும் மாலையில் விவசாயம் செய்கிறார்கள். இதில் கிடைக்கும் விளைபொருட்களை வீட்டிற்கு எடுத்து செல்லலாம். 

மேலும் பேசிய அவர், நாட்டு காய்கள், பீர்க்கங்காய், சொரைக்காய், பாகற்காய், அவரை, சூரிய காந்தி, கீரை வகைகள், நிலக்கடலை, காளான் வகைகள் என பயிரிட்டு இருக்கிறோம். இது மட்டும் இல்லாமல் மண் புழு உரமும் தயாரிக்கிறோம். எங்கள் தேவை போக மீதியை மற்ற விவசாயிகளுக்கு கொடுக்கிறோம். எங்கள் பள்ளியின் தாளாளர் முயற்சி, ஆசிரியர்களின் உழைப்பு என இயற்கை விவசாயத்தை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கிறோம் என்கிறார்.



விவசாய கல்வி பற்றியும், மாணவர்களின் ஈடுபாட்டை பற்றியும் பள்ளி தாளாளர் அரவிந்தன் அவர்களிடம் கேட்டோம். பள்ளியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்முறையாக வீட்டு மொட்டை மாடியில் முயற்சி செய்து பார்த்தோம். நல்ல பலனை கிட்டியது. அடுத்து பள்ளியில் அப்போதைக்கு பயன்படுத்தப்படாத இடத்தில் சிறிய சிறிய அளவில் பயிர்களை நட்டு பராமரிக்க ஆரம்பித்தோம். அதில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியும் பார்த்தோம். நாம் ஸ்மார்ட் வகுப்பறையில் இது தான் தக்காளி, இது தான் மிளகாய் என்று சொல்வதை விட உணர்வு பூர்வமாக அவர்கள் கண்கள் வழியே பார்த்தும், தொடுதல் மூலமாகவும் எளிதில் புரிய வைக்க முடியும் என்பதே எதார்த்தம்.

ஒரு தகவலை எவ்வளவு புத்தகங்கள் கொண்டு படித்தாலும் அது செயல்முறை கல்விக்கு ஈடாக வருமா? மேலும், பள்ளி நாட்களிலும் அவர்களுக்கு கற்பித்து கொடுத்தோம், கற்கவும் ஆரம்பித்தார்கள். கொரோனாவால் பல மானவர்களிடத்திலோ ஆசிரியர்களிடத்திலோ சரியான இணைய வசதி இருக்காது. ஒரு சில ஆசிரியர்கள் வேலை இல்லாமல் இருந்தால் அவர்களை உடனே பள்ளிக்கு அழைத்தோம். காலையில் பள்ளியில் உள்ள வகுப்பறையில் பாடம் எடுப்பதும், மாலை நேரத்தில் களப்பணி செய்வதுமாக இருக்கிறார்கள். விவசாயத்திற்கு என தனி பிரிவு தமிழகத்திலேயே முதன் முதலாக எங்கள் பள்ளியில் தொடங்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதே போல் அனைத்து தனியார், அரசாங்க பள்ளிகள் முயற்சிகள் எடுத்தால் சாதிக்கலாம் என்றார். 

மற்ற தனியார் பள்ளிகளில் ஏசி அறை, ஸ்மார்ட் வகுப்புகள், நாக்கு நுனியில் ஆங்கிலம், என்ன பாடம் நடத்துகிறார் என்று தெரியாத மாணவர்கள் என இருக்கும் போது விவசாயத்தையும் அதை சார்ந்த படிப்புகளை அடிப்படையிலேயே சொல்லி தருவது மாணவர்களின் எதிர்காலத்தை முழுமையாக்கும். 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...