கோவையில் ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட நிறுவன இயக்குனர்கள் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை - ரூ.56 லட்சம் அபராதம்!

கோவை: கோவையில் ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட நிறுவன இயக்குனர்கள் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை, 56 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நல நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவிட்டது.

கோவை: கோவையில் ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட நிறுவன இயக்குனர்கள் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை, 56 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நல நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவிட்டது.

கோவை கிணத்துக்கடவில் ஜே.பி.ஆர் ஈமு அக்ரி பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்ற பெயரில் கடந்த 2011ம் ஆண்டு அந்த கோவையை சேர்ந்த பத்மநாபன், ஜெயகுமார், ராஜசேகர் மற்றும் அரவிந்த்குமார் ஆகிய 4 பேர் இணைந்து ஈமு கோழி விற்பனை தொழிலை துவங்கினர்.

1.5 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழி குஞ்சுகள், அதற்கான கொட்டகை, மாத பராமரிப்பு தொகை ரூ.6500, ஆண்டுக்கு 15,000 போனஸ், 2 ஆண்டுகளில் முதலீடு செய்த தொகை திருப்பி அளிக்கப்பட்டு, குஞ்சுகள் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் மற்றும் ஈமு கோழி குஞ்சுகள் இல்லாமல் இதேபோல் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால மாதம் ரூ.7000, ஆண்டுக்கு 20,000 போனஸ், 2 ஆண்டுகளில் முதலீட்டு தொகை திருப்பி அளிக்கப்படும் என இரு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டங்களை நம்பி கோவையை சேர்ந்த பலர் முதலீடு செய்தனர். ஆனால், கூறியபடி சலுகை தொகையை அளிக்காததால் 2014ம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 78 முதலீட்டாளர்களிடமிருந்து 1 கோடியே 67 லட்சத்து 49 ஆயிரம் பணம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் இயக்குனர்களான 4 பேரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட, பத்மநாபன், ஜெயகுமார், ராஜசேகர் ஆகிய 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் மொத்தம் 56 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து டான்பிட் சிறப்பு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயகுமாரை கைது செய்து சிறையில் அடைக்க வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதுடன் வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த்குமாரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...