டி சர்ட்டில் எழுதினால் தமிழ் வளராது..! தமிழுக்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள் - வானதி சீனிவாசன்

திருப்பூர்: டி சர்ட்டில் எழுதினால் தமிழ் வளராது எனவும் தமிழுக்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள் என திருப்பூரில் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

திருப்பூர்: டி சர்ட்டில் எழுதினால் தமிழ் வளராது எனவும் தமிழுக்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள் என திருப்பூரில் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.



பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மோசடி நடைபெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் இன்று மனு அளித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் வேளாண்மை நிதி திட்டத்தில் மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டீ சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது, திமுகவினர் டீசர்ட்டில் தமிழ் வளர்ப்பதை விடுத்து தமிழ் வளர்ச்சிக்காக உண்மையான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

அதேபோல, மொழி திணிப்பு என்பதை பாஜகவும் எதிர்க்கத்தான் செய்கிறது. ஆனால், மும்மொழிக் கொள்கையில் இரண்டு மொழிகளோடு மேலும் ஒரு மொழியை கற்றுக் கொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.

மேலும், ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவதற்கு பாஜக வாழ்த்து தெரிவிக்கும், அது வரவேற்பாக மாறுமா என்பதை காலம் முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...