கோவையில் பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் உரிய பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்கிறதா? மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய கோரி பாஜகவினர் மனு!

கோவை: பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் கோவையில் உரிய பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்கிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய கோரி பாஜகவினர் மனு அளித்தனர்.



கோவை: பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் கோவையில் உரிய பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்கிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய கோரி பாஜகவினர் மனு அளித்தனர்.

பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 9.5 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் என ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் நபர்களின் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக இந்த உதவித்தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 40 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் முதல் தவணை 2000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வங்கியிலும் 300 முதல் 400 பேர் வரை உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.



இந்த நிலையில், கோவை மாவட்ட பாஜக விவசாய அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்பெறுவோர் பற்றிய கணக்கெடுப்பை மாநில அரசு தெளிவாக பரிசீலனை செய்து உதவித்தொகை உரிய நபர்களுக்கு தான் கிடைக்கிறதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.



அதன்படி, கோவை மாவட்டத்திலும் பிரதம மந்திரியின் வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் உரிய விவசாயிகள்தான் பயன்பெறுகிறார்களா என்பதை ஆராய்ந்து, மேலும் விவசாயிகள் அல்லாத நபர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று இருப்பின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...