கோவையில் தன்னை கருணை கொலை செய்ய வேண்டி மனு அளிக்க வந்த 96 வயதான மூதாட்டிக்கு ரூ.100 கொடுத்து உதவிய மாவட்ட ஆட்சியர்!

கோவை: கோவையில் தன்னை கருணை கொலை செய்ய வேண்டி மனு அளிக்க வந்த 96 வயதான மூதாட்டிக்கு ரூ.100 கொடுத்து மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை: கோவையில் தன்னை கருணை கொலை செய்ய வேண்டி மனு அளிக்க வந்த 96 வயதான மூதாட்டிக்கு ரூ.100 கொடுத்து மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை அன்னூர் அடுத்த குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 96 வயதான மூதாட்டி முருகம்மாள். இவருடைய 12 ஏக்கர் விவசாய நிலத்தை போலியான பத்திரம் செய்து மகன் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது குறித்து பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் முறையான சாட்சிகளை கொண்டு விசாரணை செய்து சொத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும் இல்லையெனில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தன்னையும் தனது மகள் மூவரையும் கருணை கொலை செய்ய அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.



இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியதுடன் தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறிய முருகம்மாள் பாட்டிக்கு 100 ரூபாய் பணம் அளித்து, இதனை உணவு மற்றும் பேருந்து செலவிற்கு தற்போது வைத்து கொள்ளுங்கள் என கூறி அனுப்பி வைத்தார்.

மனு அளிக்க வந்த பாட்டிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...