உயிர் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தனியார் நிறுவனத்தை தொடங்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

கோவை: உயிர் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தனியார் நிறுவனத்தை தொடங்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: உயிர் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தனியார் நிறுவனத்தை தொடங்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஒராட்டு குப்பை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மருத்துவ கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலையை கோவை பயோ வேஸ்ட் கழிவு மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் சார்பாக தொடங்கப்பட இருக்கிறது.



இந்த நிலையில், ஆலை தொடங்கப்பட்டால் காற்று, நிலத்தடி நீர் மாசுபடுவதோடு ஆஸ்துமா, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிப்படைய வாய்ப்பாக இருப்பதால் இதனை துவங்க அனுமதிக்க கூடாது என அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி கூறுகையில், நிலத்தடி நீரை மட்டுமே குடிநீராக பயன்படுத்தி வருவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டால் வாழ முடியாத சூழல் உருவாகும் எனவும் புதிதாக தொடங்க இருக்கும் இந்நிறுவனத்தை துவங்க அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், புதிதாக திறக்க உள்ள அந்த நிறுவனத்தின் நிர்வாகம் இங்குள்ள மக்களை தொடர்பு கொண்டு, உயிர் கழிவுகளை மறு சுழற்சி செய்தால் ஒன்றும் பிரச்சனை வராது என்று கூறுவதாகவும் பல கோடி செலவில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு உதவிகள் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவிப்பதாக கூறினர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...