கோவையில் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க கோரி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: கோவையில் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்திட அனுமதி வழங்க கோரி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவையில் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்திட அனுமதி வழங்க கோரி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து வரும் காய்கறிகள் முகவர்கள் மூலம் பெறப்பட்டு வியாபாரிகளுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இங்கு ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, அங்கு வியாபாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மார்க்கெட் மூடப்பட்டு மாற்று இடமாக ஜி.சி.டி கல்லூரியில் இயங்க அனுமதிக்கப்பட்டது.

அங்கு 190 கடைகள் சமூக இடைவெளியுடன் வியாபாரிகள் காய்கறிகள் விற்பனை செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக சேறும் சகதியுமாக இருந்ததால் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.



இந்த நிலையில், அண்ணா மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தினசரி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர் இது குறித்து அவர்கள் கூறுகையில், ஜி.சி.டி வளாகத்தில் 190 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் 176 பேர் இங்கு கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்ததாக கூறினர். அண்ணா மார்க்கெட்டில் மொத்தம் 400 பேர் வியாபாரம் செய்து வந்த நிலையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு 180 பேருக்கு கடைகள் அமைக்க அனுமதி அளித்தால் சுழற்சி முறையில் வியாபாரம் செய்து கொள்வோம் எனவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...