கோவை ரயில் நிலையத்தில் இருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை மயிலாடுதுறை ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே பயணித்தனர்.
கோவை: கோவை ரயில் நிலையத்தில் இருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை மயிலாடுதுறை ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே பயணித்தனர்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு, ஏதுவாக கோவை ரயில் நிலையத்தில் இருந்து பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு மாநிலத்திற்குள் பொதுப் போக்குவரத்துக்கு வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின், கோவை ரயில் நிலையத்திலிருந்து சென்னை மற்றும் மயிலாடுதுறை ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, மீண்டும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதனையடுத்து,கோவையிலிருந்து சென்னை, மயிலாடுதுறை ஆகியநகரங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்தது. இதற்கான முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து
6:15 மணிக்கு சென்னைக்கும், 7:15 மணிக்கு மயிலாடுதுறைக்கும் சிறப்பு ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.

கொரோனா அச்சம் காரணமாக, குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே சிறப்பு ரெயில்களில் பயணித்தனர். முதல் சிறப்பு ரயிலில், சென்னைக்கு பயணிக்க 374 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் 90 நிமிடம் முன்னதாக ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு, சானிடைசர் வழங்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
இதனையடுத்து, தனிநபர் இடைவெளியுடன் வரிசையில் நின்ற பயணிகளின் பயணச் சீட்டுகள் பரிசோதிக்கப்பட்டு,அவர்களது உடமைகள் ஸ்கேனிங் செய்தபின்னரே நடைமேடை பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனர்.