கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயங்கத் தொடங்கிய பேருந்து சேவை. கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வரத்து குறைவு.
கோவை: கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயங்கத் தொடங்கிய பேருந்து சேவை. கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வரத்து குறைவு.
செப்டம்பர் மாதத்திற்கான கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மாநிலத்திற்குள் பேருந்து போக்குவரத்துக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, கோவை பேருந்து நிலையங்களில் இருந்து கரூர், திருச்சி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அதிகாலை முதலே அரசின் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு முறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

50 சதவிகித பயணிகளுடன் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்க, தமிழக அரசு அனுமதி அளித்திருந்தாலும், வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.
இதனால், குறைந்த அளவிலான பயணிகளுடன் மட்டுமே வெளி மாவட்டங்களுக்கு கோவையில் இருந்து தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவையில் இருந்து கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்டவெளி மாவட்டங்களுக்கு 353 பேருந்துகள் இயக்க, கோவை அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ள நிலையில், பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளை அதிகரிக்கவும் குறைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு, சத்தியமங்கலம், சேலம், திருப்பூர் கரூர், போன்ற வெளிமாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தென்மாவட்டங்களில், மதுரைக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் முககவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றவும், பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள், பேருந்தில் பயணிகளின் தனிமனித இடைவெளியை உறுதி செய்து கொண்டு அரசின் நோய்தடுப்புவழிமுறைகளை பின்பற்றி பேருந்துகளை இயக்கவும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பேருந்துகள் இயக்கத்திற்கு முன்னதாக, கிருமிநாசினி கொண்டுஇருக்கைகள், கைப்பிடிகள் சுத்தம் செய்யப்படுகிறது.