கோவையில் மூதாட்டியின் வீட்டை ஏமாற்றி பறித்துக் கொண்ட பாஜக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

கோவையில் மூதாட்டியின் வீட்டை ஏமாற்றி பறித்துக் கொண்ட பாஜக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

கோவை: கோவையில் மூதாட்டியின் வீட்டை இடித்து இடத்தை பறித்துக் கொண்ட பாஜக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டியான, கண்ணம்மாள். அவர், பாஜகவை சார்ந்த ஆறுமுகம் என்பவர் தனது வீட்டை இடித்து, இடத்தையும் அபகரித்து விட்டதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார்.

இது குறித்து கண்ணம்மாள் அளித்துள்ள மனுவில், கடந்த 2018ம் ஆண்டு தனது வீட்டின் எதிர்புறம் வசித்து வந்த பாஜக பிரமுகர் ஆறுமுகம் மளிகை கடை நடத்த போகியத்திற்கு இடம் வேண்டுமென்று தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் தருவதாக கூறியதாக தெரிவித்து இருந்த அவர், தனது மகன் மற்றும் மகளிடம் கேட்டு சொல்வதாக கூறியிருந்தார்.



இந்நிலையில், பாஜக பிரமுகரிடம் 50,000 ரூபாய்க்குமளிகை பொருட்கள் வாங்கி உள்ளதாகவும், உடனடியாக அந்த பணத்தை திருப்பி தர வேண்டும் என்று அவரை கட்டாயப்படுத்திய ஆறுமுகம், மதுக்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, ஏமாற்றி கை நாட்டு பெற்றதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.

மேலும், கண்ணமாலிடம் ரூபாய் 50,000 கொடுத்த ஆறுமுகம், இரண்டு செண்ட் வீட்டையும், ஒரு வார காலத்திற்குள் எழுதி தரும்படி கட்டாயபடுத்தவே, போகியத்திற்கு தானே இடம் கொடுத்தேன்? என்று கேட்டபோது, அன்று சார் பதிவாளர் அலுவலகத்தில் அவர் வைத்த கை நாட்டை வைத்து, நிலத்தையும் வீட்டையும் தன் பெயருக்கு மாற்றி விட்டதாக கூறியுள்ளார்.

பின், ஆறுமுகம் ஜேசிபி இயந்திரம் கொண்டு வீட்டை தரை மட்டம் செய்ததாக குற்றம் சாட்டி இருந்த கண்ணம்மா, இது குறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அரசியல் பிரமுகர் என்ற காரணத்தால் காவலர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனது மகள் ராணி, ஆறுமுகத்திடம்கேட்டபோது, அவர்கள் மகளை தாக்கியதுடன், சாதி ரீதியாக திட்டி பேசியதாகவும், தனது அறியாமையை பயன்படுத்தி வீட்டை இடித்து நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் மனு அளித்து இருந்தார்.

இவ்வழக்கு, தொடர்பாக மதுக்கரை காவல் துறையினர் ஆறுமுகம் மற்றும் அவரது மகன் மீது இந்திய தண்டனை சட்டம்ப்படி காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், பட்டியல் வகுப்பை சேர்ந்தவரின் வீட்டை இடித்தல், சாதியின் பெயரை பயன்படுத்தி திட்டுதல் மற்றும் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்புள்ளதாக தெரிகிறது. மூதாட்டியை ஏமாற்றி நிலத்தை அபகரித்து சாதியின் பெயரை சொல்லி திட்டி வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர்மற்றும் அவரது மனைவி, மகன் கிரிஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...