கோவை செட்டி வீதியில் உள்ள ஒரு வீடு தீடீரென இடிந்து தரைமட்டமான சம்பவத்தில், இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி இருந்த ஆறு பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரை மீட்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை செட்டி வீதியில், நேற்று இரவு ஒரு அடுக்குமாடி வீடு தீடீரென இடிந்து தரைமட்டமான சம்பவத்தில், இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கி இருந்த ஆறு பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரை மீட்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இறந்தவர்கள், கோபாலசாமி (72)
மற்றும் ஸ்வேதா (25) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், தன்வீர் (5), வனஜா (65), மனோஜ் (47), மணிகண்டன் (42),
கவிதா (46), சரோஜினி (70) ஆகியோர் மீட்கப்பட்டு கோவை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்கப்பட்ட, முதல் நான்கு பேரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ள நிலையில், மற்ற இருவரை பொதுமக்கள் மீட்டுள்ளனர்.

இதில், கஸ்தூரி (65 )என்பவர் மட்டும் மீட்கப்பட வேண்டியுள்ளதால், தொடர்ந்து மீட்புபணி நடைபெற்று வருகிறது.