கோவை செட்டி வீதியில் வீடு இடிந்த சம்பவம்: மீட்பு பணிகள் தீவிரம்; மூவர் மீட்பு..!

கோவை செட்டி வீதியில் உள்ள ஒரு வீடு தீடீரென இடிந்து தரைமட்டமான சம்பவம், அப்பகுதியில் பெரும்.பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை செட்டி வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி வீடு தீடீரென இடிந்து தரைமட்டமான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் இன்று மாலை பெய்த கனமழையில், செட்டி வீதி, கேசி தோட்டம் பகுதியில், வனஜா என்பவருக்கு சொந்தமான மூன்று தளம் கொண்ட வீடு இடிந்து விழுந்தது. இதுவரை, மூவரை இடிபாடுகளில் இருந்து, தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வீட்டின், தரை தளத்தில் இருந்த மூவர் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் என்றும், முதல் தளத்தில் இருந்த வனஜா, அவரது மகள் கவிதா, மருமகள் சுவேதா, மற்றும் பேரன் தன்வீர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக்ககொண்டதாக கூறப்படுகிறது. 

மேலும், பக்கத்தில் ஓட்டு வீட்டில் இருக்கும் கஸ்தூரி மற்றும் கோபால் என இரு வயதானவர்கள் மற்றும் அவரது மகன் மணி, மற்றொரு தனி அறையில் தங்கியிருக்கும் மனோஜ் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.



தற்போது, வனஜா, கவிதா மற்றும் 6 வயது சிறுவன் என மூவர் மீட்கப்பட்டுள்ளனர் என தகவல்வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட மூவரும், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியயுள்ள நபர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



அந்த வீட்டின், அருகில் உள்ள நபர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல காவல்துறை அறிவுறுத்தி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...